தோனியின் வீடியோக்களை பார்த்து தான் கேப்டன்ஷிப் செய்து வருகிறேன். ஆனால் அவரை நேரில் பார்த்ததில்லை – இளம் வீரர் பூரிப்பு

MSdhoni
- Advertisement -

தற்போது வரை இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் டோனி தான் என்று உடனடியாக கூறுவார்கள். அந்த அளவிற்கு இளைஞர்கள் மனதில் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக பதிந்து விட்டார் தோனி. மேலும் பதட்டமான சூழ்நிலையிலும் நிதானமாக அவர் எடுக்கும் முடிவினால் கேப்டன் கூல் என்ற பெயரும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கேப்டனாக அவர் இந்திய அணிக்கு செய்தவை ஏராளம்.

Dhoni

- Advertisement -

2007 ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரின் உலக கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அதுபோக டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகள் என பல சாதனைகளை படைத்துள்ளார். இதன் காரணமாக இவரிடமிருந்து ஒரு கேப்டனாக கற்பதற்கு ஏராளம் இருக்கின்றன.

இதனை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கேப்டன் விராட் கோலி என பலரும் கூறியதை நாம் கண்டிருப்போம். இந்நிலையில் தற்போது கொரோனா ஓய்வு நேரத்தில் இருக்கும் இந்தியாவின் அண்டர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டனான பிரியம் கர்க் தோனி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

Garg

இதுவரை தோனியை நான் ஒருமுறை கூட பார்த்ததில்லை. ஆனால் அவரது வீடியோக்களை பார்த்து நான் கேப்டன்சிப்பை கற்றுக்கொண்டு வருகிறேன். போட்டியின் சூழலில் எப்படி அமைதியாக இருப்பது. அழுத்தமான வேலைகளிலும் எப்படி சூழ்நிலைகளை சரியாக கையாள்வது என்று அவரது வீடியோக்களை பார்த்து சேகரித்து வருகிறேன்.

Priyam-Garg

நான் விளையாட ஆரம்பத்திலிருந்தே இதனை செய்து வருகிறேன் அவரைப்போல எதிர்காலத்திலும் நான் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் பிரியம் கர்க். இவரது தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி பங்களாதேஷ் அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement