அவங்க பண்ணது ரொம்ப தவறு. முதல்முறையாக இருந்தாலும் ரொம்ப ஆடக்கூடாது – பங் வீரர்களை எச்சரித்த- இந்திய கேப்டன்

Priyam-Garg
- Advertisement -

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 முறை சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

ban 1

- Advertisement -

இதனால் வெற்றியை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் தலைகீழாக வங்கதேச வீரர்கள் ஆடினார். அவர்கள் செய்த பல செய்கை மைதானத்தில் சுற்றி இருந்த அனைவரையும் வெறுப்பேற்றியது. போட்டி முடிந்தவுடன் உடனடியாக பெவிலியனில் இருந்த வங்கதேச வீரர்கள் படு வேகமாக ஓடிவந்து மைதானத்திற்குள் அநாகரிகமாக நடந்து கொண்டனர். ஒரு சில வீரர்கள் நேராக இந்திய அணி வீரர்களிடம் வந்து காதுக்கு அருகே நின்று கத்திக் கொண்டிருந்தனர்.

சிலர் இந்திய அணியின் வீரர்களின் முகத்திற்கு அருகே வந்து நின்று அனாகரிகமான சைகைகளை செய்தனர். இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் பிரியம் கர்க் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது :

Ind-u-19

போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தோல்வியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொண்டோம். ஆனால் முதன் முறையாக வெற்றி பெற்ற வங்கதேச அணியால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் வெளிப்படுத்திய விதம் அநாகரிகமானது. இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டிருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் பிரியம் கார்க்.

Advertisement