ப்ரியா வாரியருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

priya
- Advertisement -

ஒரே இரவில் பல இலட்ச ரசிகர்கள் தன் கண் அசைவால் பெற்ற மலையாள நடிகை ப்ரியா வாரியர்.”ஒரு ஆதார் காதல்” என்கிற மலையாள படத்தில் புதுமுகநாயகியாக நடித்துள்ள ப்ரியா வாரியர் வரும் காட்சிகளை காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

Priyawarrier

- Advertisement -

படத்தின் டீசர் வெளியான சில மணிநேரங்களிலேயே படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட பலமடங்கு ஆதரவு கிடைத்தது. அதிலும் ப்ரியா வாரியர் வரும் காட்சிகள் ரசிகர்களை கட்டிப்போட்டது.

இந்தபடத்தின் டீசர் வெளியிடப்பட்டதும் யார் இந்த ப்ரியா வாரியர் என்று தேடிப்பிடித்து இன்ஸ்டாகிராமில் பாலோவ் செய்யத்தொடங்கினர் ரசிகர்கள். ஒரேவாரத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ப்ரியா வாரியரை பின்தொடர இன்ஸ்டாகிராமில் பிரபலமாகிவிட்டார்.

dhoni

இந்நிலையில் இந்தியா டுடேவிற்கு ப்ரியா வாரியர் அளித்த பிரத்தியேக பேட்டியில் நிருபரால் கேட்கப்பட்ட “உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்” என்கிற கேள்விக்கு “எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி தான்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement