முதல் டி20 போட்டியில் டக் அவுட் ஆனாலும் ரோஹித் மற்றும் ராகுலை கடந்து வரலாற்று சாதனை படைத்த – ப்ரித்வி ஷா

Shaw
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அன்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INDvsSl-1

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரரான பிரித்வி ஷா கடந்த போட்டியில் அறிமுகமாகி இந்திய அணி சார்பாக வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியிருந்த ப்ரித்வி ஷா இலங்கை அணிக்கெதிரான முதலாவது போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

அறிமுக போட்டியிலேயே டக் அவுட் ஆகி இருந்தாலும் பல முக்கியமான சாதனங்களை பிரித்திவி ஷா படைத்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரராக இளம் வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தற்போது ரோகித் இடமிருந்து முறியடித்து ப்ரித்வி ஷா பெற்றுள்ளார். ரோஹித் இந்திய அணிக்காக 22 வயது 37 நாட்களில் துவக்க வீரராக களம் இறங்கினார்.

அவர் இந்த சாதனையை முறியடித்து தனது 21-வது வயதில் 258 வது நாளில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரராக ப்ரித்வி ஷா அறிமுகமாகியுள்ளார். அதே போன்று மற்றொரு சாதனையும் ப்ரித்வி ஷா படைத்துள்ளார்.

அந்த சாதனை யாதெனில் இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக இளம் வயதில் களம் இறங்கியவர் என்ற சாதனையை ராகுல் வைத்திருந்தார். ராகுல் 24 வயது 62 நாட்களில் அனைத்து கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக களமிறங்கியிருந்தார். அவரது சாதனையை ப்ரித்வி ஷா 21 வயது 258 நாட்களில் இந்த சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement