ரோஹித் சர்மாவை பதம் பார்த்த ப்ரித்வி ஷாவின் த்ரோ. நல்லவேளை தப்பிச்சிட்டாரு – வைரலாகும் வீடியோ

Shaw
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களான அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மாற்றங்களை டாஸ் நிகழ்விற்கு பிறகு தெரிவித்த ரஹானே இந்திய அணியில் காயமடைந்த 4 வீரர்களுக்கு பதிலாக அகர்வால், சுந்தர், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் விளையாடுவார்கள் என்று தெரிவித்தார்.

அதன்படி டாஸ் வென்று இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்தது. கேமரோன் கிரீன் 28 ரன்களுடனும், டிம் பெயின் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பாக நடராஜன் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் சுந்தர் மற்றும் தாகூர் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

saini

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ஸ்மித் மற்றும் லேபுஷேன் ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கையில் ஸ்மித் லெக் திசையில் ஒரு பந்தினை தட்டிவிட்டு ஒரு ரன் ஓட முயற்சித்தார். உடனே அந்த பஞ்சினை பிடித்த பிரித்வி ஷா ஸ்மித்தை நோக்கி ரன் அவுட் செய்கிறேன் என்று நினைத்து பந்தினை த்ரோ அடிக்க அது கவர் திசையில் இருந்த ரோகித் சர்மாவை நோக்கி சென்றது பந்து தன்னை நோக்கி வருவதனை அறிந்து கொண்ட ரோகித் அதனை கையால் தடுத்து விட்டார். சரியான நேரத்தில் பந்தினை தடுத்ததால் பெரிய அளவில் ரோஹித்துக்கு காயம் ஏற்படவில்லை.

ஒருவேளை ரோஹித்துக்கு அவர் அடித்த த்ரோ மூலம் காயம் ஏற்பட்டிருந்தால் இந்திய அணி அதோகதிதான் என்று ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வரும் ப்ரித்வி ஷா அவ்வப்போது களத்தில் கேட்ச்களை தவற விடுவதும் இதுபோன்ற தவறான த்ரோ அடிப்பதும் என அடிக்கடி ரசிகர்களின் விமர்சனத்திற்கு தொடர்ச்சியாக ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement