நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்தான் துவக்க வீரர் – விவரம் இதோ

Ind-1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இரு அணிகளும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

IND

இந்த தொடருக்கான இந்திய அணியில் டெஸ்ட் துவக்க வீரரான ரோகித் சர்மா காயமடைந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக யார் இறங்குவார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஏற்கனவே மாயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் துவக்க வீரராக களம் இறங்கினார். இந்நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா களமிறங்க மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.

இதனால் காயமடைந்த ரோஹித்துக்கு பதிலாக ஏற்கனவே இந்திய அணியின் இளம் துவக்க வீரராக களம் இறங்கிய ப்ரித்வி ஷா இந்த தொடரில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் ப்ரித்வி ஷா மற்றும் சுபமான் கில் ஆகியோருக்கு இடையே துவக்க வீரராக களமிறங்குவது யார் என்ற கடும் போட்டி நிலவியது.

Shaw

இந்நிலையில் தற்போது பயிற்சிப் போட்டியில் களமிறங்கிய ஷா மற்றும் கில் ஆகியோர் டக் ஆகி வெளியேறினார். எனவே ப்ரித்வி ஷா தான் துவக்க வீரராக களம் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அவர் சதமடித்து அசத்தி இருப்பதால் அவரை இந்த போட்டியிலும் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.