ராகுல் சார் என்கிட்ட எதுவும் சொல்லல. என்னோட அதிரடிக்கு இதுதான் காரணம் – ஆட்டநாயகன் ப்ரித்வி ஷா பேட்டி

Shaw
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 262 ரன்கள் குவிக்க அதன் பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 263 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ishan 2

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி 24 பந்துகளை சந்தித்த ப்ரித்வி ஷா 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் குவித்து இந்திய அணியின் சிறப்பான துவக்கத்திற்கு காரணமாக அமைந்ததால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. துவக்கம் முதலே அதிரடி காட்டிய ப்ரித்வி ஷா பவுலர்களை கொஞ்சமும் விட்டு வைக்காமல் தொடர்ச்சியாக பவுண்டரிகளை விளாசினார்.

இறுதியாக ஆறாவது ஓவரின் போது தனஞ்ஜெயா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் கொடுத்த சிறப்பான துவக்கம் இந்திய அணி விரைவாக இலக்கை கடக்க உதவியதால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தனது இந்த அதிரடி குறித்து போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் ப்ரித்வி ஷா கூறுகையில் :

ராகுல் சார் என்னிடம் இந்த போட்டியில் விளையாடுவது குறித்து எதுவும் கூறவில்லை. நான் என்னுடைய இயல்பான திறனை இந்த போட்டியில் வெளிப்படுத்த நினைத்தேன். அதுமட்டுமின்றி மோசமான பந்துக்காக காத்திருந்து சரியான பந்துகளை தேர்வு செய்து அடித்தேன். இதன் காரணமாகவே என்னால் அதிரடியாக விளையாட முடிந்தது. மேலும் நான் எப்போதும் ஸ்கோர் போர்டில் ரன்களை அதிகரிக்கவே நினைக்கிறேன்.

ஏனெனில் விரைவாக ரன்களை குவிக்கும் போது அது அணிக்கும் நல்லது, வெற்றியையும் சீக்கிரம் எட்டலாம் இதன் காரணமாகவே நான் அதிரடியாக விளையாடினேன். மைதானத்தில் இருந்த தன்மை எங்களுக்கு கைகொடுத்தது. இந்த போட்டியில் தலையில் பந்து தாக்கிய பிறகு நான் சற்று போகஸை இழந்தேன் என்றும் ப்ரித்வி ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement