ஊக்க மருந்து பிரச்சனையில் நான் சிக்கியபோது டிராவிட் என்ன செய்தார் தெரியுமா ? – ப்ரித்வி ஷா ஓபன்டாக்

Dravid
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா தனது சிறப்பான ஆட்டம் காரணமாக 2018 ஆம் வருடம் தனது 18 வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 339 ரன்களையும், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 84 ரன்களை குவித்துள்ளார். அதன் பிறகு காயம் மற்றும் ஊக்கமருந்து சர்ச்சை என தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பை இழந்த பிரித்வி ஷா இந்திய அணியில் தனது இடத்திற்காக காத்திருக்கிறார்.

shaw

- Advertisement -

நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணிக்காக இணைய காத்திருக்கிறார். தற்போது இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் துவக்க வீரராக இடம்பெற்றுள்ள ப்ரித்வி ஷா நிச்சயம் இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில் தான் இழந்த இடத்தை பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தற்போது 2019ஆம் ஆண்டு தான் தடைசெய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில் டிராவிட் அவருக்கு கொடுத்த ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எட்டு மாத காலம் கிரிக்கெட் விளையாட்டில் தடை செய்யப்பட்ட போது ராகுல் டிராவிட் சார் எனக்கு போன் செய்து இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமான ஒன்று.

Shaw

இதில் உன் மீது எந்த தப்பும் இல்லை நீ கவலைப்படாதே. வலுவாக அணிக்கு திரும்புவாய் என தனக்கு ஆறுதல் கூறியதாக தற்போது ப்ரித்வி ஷா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் நிலையில் ஓப்பனாக ப்ரித்வி ஷா களமிறங்குவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement