இந்த ஒரு விஷயத்தில் டிராவிட் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவரை பாத்தாலே எனக்கு பயம் – ப்ரித்வி ஷா ஓபன்டாக்

Shaw

இந்திய அணியின் ஜாம்பவானான ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இளம் வீரர்களை ஊக்குவிப்பதிலும், உருவாக்குவதிலும் தனது முனைப்பு காட்டி வந்தார். அதன்படி 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக இருந்த டிராவிட் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பயிற்றுவித்து தற்போது இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களாக உருவாக்கி வருகிறார். அவரது தலைமையின் கீழ் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் போன்ற பல வீரர்கள் இந்திய அணிக்காக தற்போது விளையாடி வருகின்றனர்.

shaw 1

இந்நிலையில் தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் கேப்டனாக இருந்த போது ராகுல் டிராவிட்டை கண்டு பயந்ததாக ப்ரித்வி ஷா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் டிராவிட் எங்களுக்கு பயிற்சியாளராக இருந்தபோது வீரர்களிடையே எப்போதும் ஒழுக்கத்தை மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார். எப்பொழுதும் வீரர்களிடையே ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் நாங்கள் அவரை கண்டாலே பயமாக இருக்கும்.

- Advertisement -

ஆட்ட நேரம் மற்றும் பயிற்சி நேரம் ஆகியவற்றை தவிர்த்து மற்ற நேரங்களில் நட்புணர்வுடன் இருக்கும் டிராவிட் இரவு உணவின்போது எங்களுடனே அமர்ந்து சாப்பிடுவார். அப்போதெல்லாம் இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் அருகில் இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் : ராகுல் டிராவிட் உடன் இருப்பது ஒவ்வொரு வீரருக்கும் கனவாக இருக்கும் அந்த வகையில் நான் அவருடன் நேரத்தை செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சி.

rahul-dravid

அவர் பயிற்சியாளராக இருந்தபோது எந்த ஒரு வீரரின் பேட்டிங் ஸ்டைலையும் மாற்றவில்லை இயல்பான அணுகு முறையையே பின்பற்ற சொல்வார். அதுமட்டுமின்றி நாங்கள் பேட்டிங்கில் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் எங்களிடம் உள்ள திருத்தங்களை மட்டும் சரியாக சொல்வார். அதுமட்டுமின்றி போட்டியின் போது மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும், அணியில் இருக்கும்போது வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அதிகம் பேசுவார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Dravid

தொடர்ந்து பேசிய ப்ரித்வி ஷா கூறுகையில் : ஒவ்வொரு போட்டியின் போதும் நாங்கள் விளையாடுகையில் டிராவிட் எங்களை போட்டியை அனுபவித்து விளையாடும்படி அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். எதிரணியின் வியூகங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை பொறுத்து நாங்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்தும் அதிகம் எங்களுக்கு சொல்லித்தருவார். அவரின் கீழ் பயிற்சி பெற்ற நாங்கள் நல்ல நம்பிக்கையை பெற்று தற்போது முன்னேறி உள்ளோம் ஒவ்வொரு வீரரிடமும் ராகுல் டிராவிட் தனிப்பட்ட அக்கறையுடன் இருப்பார் எனவும் ப்ரித்வி ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement