கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பி.சி.சி.ஐ-யால் தடைசெய்யப்பட்ட ப்ரித்வி ஷா- காரணம் இதுதான் அதிர்ச்சி தகவல்

Shaw
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா அடுத்த மூன்று மாதத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ அளித்த அறிவிப்பில் : இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளார்.

Prithvi_Shaw

- Advertisement -

தடைசெய்யப்பட்ட டெர்புடலின் என்ற ஊக்க மருந்தை கவனக்குறைவாக ப்ரித்வி ஷா எடுத்துக் கொண்டார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து இருமல் மருந்துகளில் கூட காணப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ப்ரித்வி ஷாவிற்கு நவம்பர் 15 2009 வரை கிரிக்கெட் விளையாட தடை விதித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது ப்ரித்வி ஷா கடந்த பிப்ரவரி 22 2019 சையத் முஷ்டாக் அலி போட்டிகளில் கலந்துகொண்ட போது ப்ரித்வி ஷா அளித்த சிறுநீர் மாதிரியில் டெர்புடலின் என்ற ஊக்க மருந்து கலந்து இருந்தது தெரிய வந்துள்ளது இருமல் மருந்தை எடுத்துக் கொண்ட போது இந்த ஊக்க மருந்தினை ப்ரித்வி ஷா தெரியாமல் உட்கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Prithvi

19 வயதான இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரரான இவரின் இந்த தடை இந்திய ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் கவனமாக இருக்க ப்ரித்வி ஷாவிற்கு கிரிக்கெட் நிர்வாகம் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement