பேட்டிங்கில் நல்லா ஆடுனா மட்டும் போதாது. ப்ரித்வி ஷா செய்யும் தொடர் தவறு – இதை கவனிச்சீங்களா ?

Shaw
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது நேற்றுடன் முடிவு பெற்றது. இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. முதல் இரு போட்டிகளிலும் அபாரமான விளையாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று தோல்வியை சந்தித்தது. நேற்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களை கூட முடிக்காமல் 43.1 ஓவர்களில் 225 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

avishka

- Advertisement -

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ப்ரித்வி ஷா செயல்பட்ட விதம் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பேட்டியின்போது முதல் போட்டியிலும் சரி, இன்றைய மூன்றாவது போட்டியிலும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் 49 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் குவித்து அதிரடி காட்டி இருந்தாலும், பீல்டிங்கில் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ஏற்கனவே பிரித்வி ஷா உடல் எடை மீதும், பிட்டாக இருக்க வேண்டும் என்றும் அதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

shaw

ஆனால் தற்போதும் ரன்னிங் போடும் போது மிகவும் பொறுமையாக ஓடுகிறார். அதுமட்டுமின்றி முக்கியமான கட்டத்தில் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த பிரித்வி ஷா முக்கியமான கேட்ச்யை தவிர விட்டதும் கேப்டன் தவான் மட்டுமின்றி பவுலரும் விரக்தி அடைந்தார். இதேபோன்று பீல்டிங்கில் பொறுமையாக அவர் இருந்தால் நிச்சயம் அவர் அணியில் இருந்து வெளியேற்றப் பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்திய அணியில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக ரிஷப் பண்ட் சில போட்டிகளில் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் ப்ரித்வி ஷாவும் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. சீக்கிரம் உடற்தகுதியில் கவனம் செலுத்துங்க பாஸ்..

Advertisement