என்னையா டீம்ல இருந்து தூக்குனீங்க. 227 ரன்கள் அடித்து அலறவிட்ட இளம்வீரர் – விவரம் இதோ

Shaw
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ப்ரித்வி ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக துவக்க வீரராக விளையாடி வந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து இந்திய அணியில் தனக்கான இடத்தை பெரிய அளவில் நிலைநிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு காயம் காரணமாக சில தொடர்களை அவர் இழந்தார்.

Shaw-1

- Advertisement -

மீண்டும் தற்போது சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பிய போது முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த மோசமான ஆட்டம் காரணமாக அடுத்த 3 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதன்பின்னர் தற்போது நடைபெற்று இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் பார்ம் சரிவர இல்லாததால் அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது சற்று கடினமாகி இருந்தது. மேலும் அவரது இடத்தை தற்போது சுப்மன் கில் கெட்டியாக பிடித்துள்ளார். இதன் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வேட்கையில் உள்ளார்.

shaw 2

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் டொமஸ்டிக் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி வருகிறார். மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வரும் அவர் இன்று நடைபெற்ற புதுச்சேரி அணிக்கு எதிரான போட்டியில் 152 பந்துகளை சந்தித்து 227 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இதில் 31 பவுண்டரிகளும் ஐந்து சிக்ஸர்களும் அடங்கும்.

shaw 1

இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் தனிநபராக அடித்த அதிகபட்ச ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இழந்த தனது பார்மை இப்பொழுது மீண்டும் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மீட்டெடுத்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். மிகவும் இளம் வயது வீரரான இவர் அடுத்த சச்சின், குட்டி சேவாக் என்று பலராலும் வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement