ரசிகர்களின் கடும் விமர்சனத்தை பெற்று மனம்நொந்து ப்ரித்வி ஷா வெளியிட்ட பதிவு – வைரலாகும் செய்தி

Shaw
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

Ind

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 191 எடுத்திருந்தது. 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்தது. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரரான பிரித்திவி ஷா முதல் இன்னிங்சில் டக்-அவுட் மற்றும் 2வது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் சுனில் கவாஸ்கர்,ஜாகிர் கான், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி என அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

Shaw

இதில் சுனில் கவாஸ்கர் பிரித்திவி ஷாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொந்தளித்துள்ளார். பிரித்வி ஷா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பிரெட் லீ கூறியுள்ளார்.

Shaw-1

இந்நிலையில் இவர்களின் விமர்சனங்களுக்கு எல்லாம் பிரித்வி ஷா இன்ஸ்டகிரமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ள பதிவில் “ சில நேரங்களில் நமது முயற்சி வீணாகலாம். அதற்காக அனைவரும் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அதற்கு அர்த்தம், அந்த செயலை நம்மால் கண்டிப்பாக செய்ய முடியும், ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது” என்றார் பிரித்வி ஷா.

Advertisement