என்னப்பா இவருக்கு அதிர்ஷ்டம் இல்லையோ ? மீண்டும் ப்ரித்வி ஷாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை – விவரம் இதோ

இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கி அறிமுகப் போட்டியில் சதமடித்து அசத்தியது மட்டுமின்றி தனது அழுத்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதனால் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று அதிகம் நம்பப்பட்டது.

prithvi-shaw

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பயிற்சி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் வெளியேறினார். அதன் பின்னர் காயம் காரணமாக சில தொடர்களில் இடம் பெறாமல் இருந்த அவர் மீண்டும் சையத் முஷ்டக் அலி கோப்பையின் போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கி கிரிக்கெட் போட்டியில் இருந்து சில மாதங்கள் வரை தடை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் தடையில் இருந்து மீண்ட ப்ரித்வி ஷா ரஞ்சி கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தற்போது மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம் பிடித்து விளையாட இருந்தார். இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இவர் இந்திய ஏ அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Prithvi

ஏனெனில் கடந்த வாரம் கர்நாடக அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியின்போது ஓவர் த்ரோ ஒன்றை தடுக்கும் முயற்சியில் அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் இருக்கும் பிருத்வி ஷா நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Prithvi-Shaw

மேலும் எஞ்சிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இருக்குமா ? என்று விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி இந்திய ஏ அணியுடன் நியூசிலாந்து புறப்படவேண்டிய நிலையில் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டதால் அணியில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நல்ல திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல் அடிக்கடி இவருக்கு ஏதாவது ஏற்பட்டுக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.