ஊக்கமருந்து தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பும் லிட்டில் சச்சின் – விவரம் இதோ

- Advertisement -

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரான ப்ருதிவி ஷா இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237 ரன்களை குவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக அறிமுகம் ஆன இவர் தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

prithvi-shaw

- Advertisement -

அடுத்த சச்சின் என்று புகழப்பட்ட இவர் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை இருமல் மருந்து கலந்து உட்கொண்டதாக இவர் மீது சோதனையில் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இதனால் இவர் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட மார்ச் மாதம் 16ம் தேதியிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய தடைக்காலம் தற்போது 15ம் தேதியுடன் முடிவடைவதால் தற்போது இந்தியாவில் நடைபெற்று இருக்கும் சையது முஷ்டாக் அலி டி20 தொடருக்கான மும்பையில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Prithvi_Shaw

மேலும் வரும் 16ம் தேதி அவருக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படுகிறது. அவர் இவர் இந்த தொடரில் பங்கேற்க அனைத்து வாய்ப்பும் இருக்கிறது. அவர் முழு உடல் தகுதியுடன் தற்போது இருக்கிறார் ஆனால் இப்போதைக்கு உறுதியாக எதையும் சொல்ல முடியாது என்று மும்பை அணியின் தேர்வுக்குழு தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement