பும்ரா மட்டுமல்ல மற்றொரு நட்சத்திர வீரரும் இந்திய அணி கூட ப்ராக்டீஸ் பன்றாரு – வைரலாகும் புகைப்படம்

bumrah-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை விசாகபட்டினம் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் காயம் காரணமாக சமீபத்தில் தொடர்களாக இந்திய அணியில் பங்கேற்காமல் இருந்த முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த வலைப் பயிற்சியில் ஈடுபடுவார் என்று ஏற்கனவே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா இரண்டு மணி நேரம் பந்துவீசி பயிற்சியை மேற்கொண்டார். இருப்பினும் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தான் அணியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியது.

அதனை தொடர்ந்து தற்போது பும்ரா மட்டுமல்லாது மற்றொரு இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ப்ரித்வி ஷாவும் இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்திய வீரர்களுடன் பயிற்சி செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பும்ராவுடன் இருக்கும் ப்ரித்வி ஷா தான் பேட்டிங் பயிற்சியை மேற்கொள்ள விருப்பத்தின் பேரில் அணி நிர்வாகத்தின் அனுமதியோடு பயிற்சி செய்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

shaw

ஏனெனில் சமீபத்தில் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடை செய்யப்பட்டு இருந்த ஷா அதனால் சமீபத்தில் தான் தடையில் இருந்து மீண்டு சையது முஷ்டாக் அலி டிராபி மற்றும் ரஞ்சி கோப்பையில் அசத்தினார். இதனால் மீண்டும் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால் தற்போது இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement