- Advertisement -
ஐ.பி.எல்

KKR vs DC : அடுத்த சச்சின் நான் தான் என்று மீண்டும் நிரூபித்த ப்ரித்வி ஷா – காரணம் இதுதான்

கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் இரண்டாவதாக விளையாடிய டெல்லி அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா நேற்று 7 பந்துகளில் 14 ரன்களை அடித்தார். இதில் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் குறிப்பாக கவர் திசையில் அடித்த சிக்ஸ் சச்சினை நியாபகப்படுத்தியது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடித்துவிட்ட ஷா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். விரைவில் ஒருநாள் அணியிலும் அவரை எதிர்பார்க்கலாம். தற்போது 19 வயதே ஆகும் அவர் பலரது சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சச்சினின் பிரதிபலிப்பாக பார்க்கப்படும் இவர் அடுத்த சச்சின் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த டென்லி அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் சுபமான் கில் களமிறங்கினார்.

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கில் 39 பந்தில் 65 ரன்களும், ரசல் 21 பந்தில் 45 ரன்களும் குவித்தனர். இதனால் டெல்லி அணிக்கு 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

பிறகு ஆடிய டெல்லி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக தவான் 63 பந்தில் 97 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும், ஆட்டநாயகன் விருதினையும் தட்டிசென்றார்.

- Advertisement -
Published by