ரஞ்சி கோப்பை மட்டுமல்ல நியூசிலாந்து சென்றும் அசத்திய இளம் வீரர். டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா ?

Prithvi-Shaw
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய ஏ அணி தற்போது நியூசிலாந்து சென்று நியூசிலாந்து ஏ அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடுகிறது.

ind 1

- Advertisement -

இந்த தொடருக்கு முன்னதாக இரண்டு பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணி நியூசிலாந்து லெவன் அணியுடன் மோதுகிறது. இந்த பயிற்சி போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 372 ரன்களை குவித்தது.

ப்ரித்வி ஷா சிறப்பாக விளையாடி 100 பந்துகளில் 150 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தமிழக வீரரான விஜய்சங்கர் 41 பந்தில் 58 ரன்களை அடித்து அசத்தினார். தற்போது 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே ஊக்கமருந்து பிரச்சனை மற்றும் காயம் என தொடர்ந்து இந்திய அணியில் விளையாட முடியாமல் இருந்த ப்ரித்வி ஷா இந்த போட்டியில் அசத்தியுள்ளார்.

Shaw

ப்ரித்வி ஷா தொடர்ந்து ரஞ்சி கோப்பை மற்றும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்த தொடர் என சிறப்பாக விளையாடி வருவதால் அவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர்கள் பட்டியலில் பரிசீலனையில் இருப்பார் என்றும் மேலும் துவக்க வீரர்களுக்கான போட்டியில் நிச்சயம் ப்ரித்வி ஷா பெயரும் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. விரைவில் அவர் இந்திய அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement