பிருத்வி ஷா அதிரடி சதம்..! வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறல்..! – இந்திய ஏ அணி அபாரம்..!

shah

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் 18 வயது இளம் வீரராக களமிறங்கிவர் ப்ரித்தீவ் ஷா. u 19 உலக கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் பிருத்வி ஷா அபார சதமடித்து அசத்தியுள்ளார்.
shah
இந்திய ஏ அணி -இங்கிலாந்து- லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வந்தது . இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி விளையாடி வந்தது. இந்நிலையில் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.

இந்த தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 4 ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 383 ரன்களை எடுத்து.
prithvi-shaw
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ள இந்திய அணி பொறுப்பாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனா ப்ரித்தீவ் ஷா அதிரடியாக விளையாடி வருகிறார். 137 பந்துகளை எதிர்கொண்டுள்ள அவர் 151 ரன்களை குவித்து அசதி வருகிறார். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை குவித்துள்ளது.