மீண்டும் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்த இந்திய வீரர் – இன்னொரு முறை இவருக்கு சேன்ஸ் கொடுப்பீங்க

Shaw
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று துவங்கி விளையாடி வருகிறது. இன்று காலை 8:30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்தால் மைதானம் சாதகமாக அமையும் என்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

INDvsAUS

- Advertisement -

துவக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்களின் அதிவேக பந்துவீச்சு மற்றும் ஸ்விங் மூலம் இந்திய வீரர்களை ரன் குவிக்க முடியாமல் திணற வைத்து வருகின்றனர். குறிப்பாக தற்போது உணவு இடைவேளை வரை 25 ஓவர்கள் வீசி 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது. ஓவருக்கு 2 ரன்கள் அடித்து இருந்தால் கூட 25 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை அடித்து இருக்க வேண்டும். ஆனால் இந்திய அணி 25 ஓவர் முடிவில் 41 ரன்களை குவித்து உள்ளதால் ஓவருக்கு 2 ரன்க்கும் குறைவாக ரன்ரேட் சென்று கொண்டிருக்கிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், கிரீன் என அனைவரும் அதிவேகத்தில் பந்து வீசி வருகின்றனர். மேலும் அவர்களது அணியில் அனுபவப்பந்து வீச்சாளரான லயன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் பெரும் எதிர்ப்புக்கு இடையே வாய்ப்பினைப் பெற்ற இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா பெரிய அளவில் சொதப்பி இருக்கிறார்.

அனைவரும் எதிர்பார்த்த வகையிலேயே இன்றைய போட்டியின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஸ்டார்க் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி டக் அவுட்டாக வெளியேறினார். ஏற்கனவே இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வாய்ப்பைப் பெற்ற அவர் இந்த போட்டியில் நிச்சயம் நிரூபித்தால் தான் இனிவரும் போட்டிகளில் அவரால் இந்திய அணியில் நீடிக்க முடியும் என்ற நிலைமையில் இருந்தது.

Gill 2

ஆனாலும் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து அளித்த வாய்ப்பை இன்று அவர் கோட்டை விட்டுள்ளார். இதனால் நிச்சயம் இரண்டாவது போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக துவக்க வீரர் இடத்திற்கு கில் மற்றும் ஒருநாள், டி20 என அசத்தலான பார்மில் இருக்கும் ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement