எல்லாம் கஷ்டத்தையும் பாத்தாச்சு. இனி அடிச்சி நொறுக்க வேண்டியது தான் பாக்கி – ஒருநாள் அணியில் இடம்பிடித்த லிட்டில் மாஸ்டர்

Prithvi-Shaw
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற நிலையில் கைப்பற்றி அசத்தியது. அதன் பின்னர் தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு பெரிய தொடருக்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

Dhawan

- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனும், ஒருநாள் தொடரில் ப்ரித்வி ஷாவும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 அணியில் சஞ்சு சாம்சன் அவ்வபோது இடம்பெற்று வந்தாலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதே போன்று தற்போது ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ள ப்ரித்வி ஷா இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

அடுத்தடுத்து காயம், ஊக்க மருந்து சோதனை என்று இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவித்த ப்ரித்வி ஷா விஜய் ஹசாரே கோப்பை, ரஞ்சி கோப்பை மற்றும் உள்ளூர் போட்டிகள் என தனது அசாத்தியமான பேட்டிங் திறமையை வெளிக்காட்டி வருகிறார். மேலும் தற்போது நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராகவும் 100 பந்துகளில் 150 குறித்து தனது அதிரடி காட்டினார். இதன் மூலமாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அதுவும் குறிப்பாக ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது சிறப்பான ஒன்றாகும்.

Prithvi

ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் அடித்து நொறுக்குவது உறுதி மேலும் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று கூறப்படும் இவரது பேட்டிங் ஸ்டைல் அப்படியே சச்சினை ஒத்து இருக்கும் என்பது ரசிகர்களுடைய கருத்து. இவரை தொடர்ச்சியாக நாம் இந்திய அணியில் பார்க்க முடியுமா என்பதை இந்த தொடரின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement