சூப்பர் 8 சுற்றில் அவர் கண்டிப்பா விளையாடனும்.. வேணும்னா சிராஜை கழற்றி விடலாம்.. அனில் கும்ப்ளே வெளிப்படை

Anil Kumble 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்தை எளிதாக வீசிய இந்தியா 2வது போட்டியில் பாகிஸ்தானை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்படியே அமெரிக்காவையும் 3வது போட்டியில் வீழ்த்திய இந்தியா குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கு முன்பாக இந்தியா தங்களுடைய கடைசி போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் லீக் சுற்று போட்டிகள் முழுவதும் அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ளது. அதில் அமெரிக்க மண்ணில் நடைபெற்ற போட்டிகளின் மைதானங்கள் பேட்டிங்க்கு சவாலாகவும் வேகப்பந்து வீச்சு சாதகமாகவும் இருந்ததை பார்த்தோம்.

- Advertisement -

கும்ப்ளேவின் தேர்வு:
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுமே சமமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் அங்கே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் இந்தியா குல்தீப் யாதவை ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னரை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் விளையாடினால் போதும் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் முகமது சிராஜ்க்கு பதிலாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் அசத்திய இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் விளையாட வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசிய விதம் சிறப்பாக இருந்தது. மேலும் டி20 கிரிக்கெட்டில் அவர் பல்வேறு இடங்களில் நன்றாகவே பந்து வீசுகிறார். அதனால் முகமது சிராஜ்க்கு பதிலாக நான் அவரை தேர்ந்தெடுப்பேன். குறிப்பாக ஹர்திக் பாண்டியாவுடன் 2 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் இந்தியா தேர்ந்தெடுக்க விரும்பினால் அவர் சிறந்த வாய்ப்பாக இருப்பார்”

இதையும் படிங்க: இதே நினைப்புடன் வெ.இ போகாதீங்க.. சூப்பர் 8 சுற்றில் அவர் கண்டிப்பா விளையாடனும்.. பியூஸ் சாவ்லா பேட்டி

“அவரை தேர்வு செய்வது இடது கை வேகத்தையும் கொடுக்கும். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அசத்தியது அவருக்கு போதுமான தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும்” என்று கூறினார். அந்த வகையில் பும்ரா, அர்ஷ்தீப், பாண்டியா ஆகியோர் சூப்பர் 8 சுற்றில் வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்பட வேண்டும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement