தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தினை நான் எடுத்துக்கொள்ள இதுதான் காரணம் – ப்ரித்வி ஷா ஓபன் டாக்

Prithvi
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா அடுத்த மூன்று மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ ஆல் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டு உள்ளார். பிப்ரவரி மாதம் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி தொடரின்போது ப்ரித்வி ஷா தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

Shaw

- Advertisement -

டெர்புடலின் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஊக்கமருந்து சாதாரண இருமல் மருந்தின் மூலம் அவர் உட்கொண்டிருப்பதை பிசிசிஐ தெளிவாக குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் ப்ரித்வி ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளர். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

பி.சி.சி.ஐ யின் அறிவிப்பு மூலமே நான் ஊக்கமருந்து எடுத்து எனக்கு தெரியவந்தது. இந்த தடைக்காலம் எனக்கு பேரிடியாக இருக்கிறது. இருப்பினும் இதனை கடந்து மீண்டும் நான் வலுவாக வருவேன். நான் சையத் முஸ்டாக் அலி தொடரின் போது சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் அணி மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நானாக ஒரு இருமல் மருந்தை உட்கொண்டேன். அதுவே நான் செய்த தவறு என் விதி இப்படி நடக்கவேண்டும் என்று இருக்கிறது.

இப்படி நான் யாரையும் கேட்காமல் தெரியாமல் ஒரு செய்த ஒரு சிறிய தவறினால் இப்போது தடை செய்யப்பட்டுள்ளேன். இது போன்று இனி வீரர்கள் யாரும் செய்ய வேண்டாம் மேலும் அணி அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement