கொடுத்த வாய்ப்பை தவறவிட்ட இளம்வீரர். அடுத்த போட்டியில் நிச்சயம் தூக்கிடுவாங்க – பாவங்க தம்பி

Shaw-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் குவிக்க அடுத்ததாக தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி தற்போது 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பகலிரவு போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சுவாரஸ்யமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Ashwin

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 62 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் இந்திய அணி தற்போது இந்த தொடரில் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றே கூறலாம். மேலும் நாளைய மூன்றாம் நாள் ஆட்டநேர முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்க நிச்சயம் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

தற்போது வரை இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். ஆனால் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா இந்த போட்டி முழுவதுமே தனது ஏமாற்றத்தை அளித்தார். ஏற்கனவே முதல் போட்டிக்கு முன்னர் நடந்த பயிற்சி ஆட்டத்தில் சோபிக்க தவறிய அவர் இந்த டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட போதே அவர் மீது ஏகப்பட்ட சர்ச்சை எழுந்தது.

Shaw

மேலும் அவரை அணியில் சேர்க்க கூடாது என்று பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் அதையும் மீறி அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து அளித்த வாய்ப்பை அவர் வீணடித்துள்ளார் ஆம் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறிய அவர் மீண்டும் தற்போது 2-வது இன்னிங்சில் 4 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து ப்ரித்வி ஷாவின் பேட்டிங் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது.

shaw

அதனால் தனக்கு கிடைத்த அருமையான இரண்டு வாய்ப்பையும் அவர் கோட்டை விட்டுள்ளார். அதுமட்டுமின்றி பீல்டிங்கிலும் மெத்தனமாக செயல்படும் அவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான லாபுஷேன் கொடுத்த எளிதான கேட்ச்சை தவற விட்டதும் குறிப்பிடத்தக்கது. இவைகளை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்றும் அவருக்கு பதிலாக சுப்மன் கில் அல்லது கே.எல் ராகுல் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement