அடுத்த சச்சின், குட்டி சேவாக்ன்னு சொன்னீங்க. கடைசில டீம்ல இருந்தே தூக்கிட்டாங்க – இளம்வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Shaw-1
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதிலும் வரும் 24ஆம் தேதி அன்று நடக்க உள்ள டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் இவ்வேளையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டது.

- Advertisement -

இதோ கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக்கேப்டன்), ரோகித் ஷர்மா, மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர நெட் பவுலர்களாக அன்கித் ராஜ்புட், ஆவேஷ் கான், சந்தீப் வாரியார், கிருஷ்ணப்ப கவுதம் மற்றும் சவுரப் குமார் இடம்பெற்றுள்ளனர். இரண்டு ஸ்டான்ட்பை பிளேயர்களாக கே.எஸ். பரத் மற்றும் ராகுல் சாஹர் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணியில் இருந்து ப்ரித்வி ஷா நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த அவர் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 10 பந்துகளை கூட சந்திக்காத நிலையில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் மட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் கில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடினார்.

Shaw

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அடுத்த சச்சின், குட்டி சேவாக் என பலராலும் பாராட்டப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் சோபிக்கவில்லை. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரிலும் சொதப்பியதால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள கடைசி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் அணியிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேட்டியின்போது மெத்தனமாக செயல்படுவது, கால்களை நகர்த்தாமல் விளையாடுவது, மற்றும் தவறான ஷாட்டுகளை தேர்வு செய்வது என சில பிரச்சினைகள் அவருக்கு உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement