வருண் சக்ரவர்த்தியோடு சேர்ந்து இன்றைய போட்டியில் அறிமுகமான மற்றொரு வீரர் – யார் தெரியுமா ?

INDvsSl-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஆனது 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக தற்போது இந்திய அணி விளையாடி விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று கொழும்பு மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ind

- Advertisement -

இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு அறிமுகம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் டி20 கிரிக்கெட்டில் மற்றொரு வீரர் இந்திய அணிக்காக அறிமுகமாகி உள்ளார்.

ஆனால் அவர் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகவில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகியவர்தான். அந்த வீரர் வேறுயாருமில்லை ப்ரித்வி ஷா தான்.

Shaw

ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய ப்ரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தற்போது டி20 அணியிலும் அறிமுக வீரராக களம் இறங்கியுள்ளார். ஆனால் இன்றைய போட்டியில் அதிர்ஷ்டவசமின்றி அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறியுள்ளார்.

தற்போது இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 78 ரன்களுடன் விளையாடி வருகிறது. கேப்டன் தவான் 27 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 22 ரன்களுடனும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement