ப்ரித்வி ஷா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப நல்ல வாய்ப்பு இருக்கு – அதற்கு அவர் என்ன செய்யனும் தெரியுமா ?

Shaw-1
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்றும் அவர் முதற்கட்ட சிகிச்சையும் முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

gill

- Advertisement -

ஏற்கனவே கடந்த சில தொடர்களாக ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடி வரும் கில் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினால் தொடக்க வீரராக அந்த இடத்தில் யார் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. அதன்படி அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் அணியில் இருந்தாலும் அவரைத் தாண்டி இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முனைப்பு காட்டும் என்று தெரிகிறது.

அந்த வகையில் ப்ரித்வி ஷா மீண்டும் அணியில் இணைய நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு அவர் இலங்கை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிக அவசியம் ஏனெனில் இந்திய முதன்மை அணி தற்போது இங்கிலாந்தில் இருக்க இளம் வீரர்களை கொண்ட இரண்டாவது அணி தற்போது 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இலங்கை சென்றுள்ளது.

shaw-2

இந்த தொடரானது வரும் 13ஆம் தேதி துவங்கி இந்த மாத இறுதியில் முடிவடைவதால் நிச்சயம் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் ப்ரித்வி ஷா விளையாடுவார். இந்த தொடர் முழுவதும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினால் அவர் இங்கிலாந்து தொடருக்கான அணிக்கு அழைக்கப்பட அதிகவாய்ப்புள்ளது.

ஏனெனில் ஏற்கனவே உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடர் மற்றும் இந்த இலங்கை தொடர் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு நிச்சயம் அவர் இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு திரும்ப அதிகமான வாய்ப்பு உள்ளது. அதேபோன்று அவர் பாதியில் இங்கிலாந்து சென்றாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்திய பிறகு அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது.

Advertisement