இந்திய ஏ அணி -இங்கிலாந்து- லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை 2 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது.
மூன்று அணிகளும் 2 முறை நேருக்கு நேர் சந்தித்த இந்த தொடரில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது, இதில் மேற்கிந்திய அணி ஒரு போட்டியிலும் கூட வெற்றிபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்களை குவித்தது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரிதிவ் ஷா மற்றும் ரிஷப் பண்ட் களமிறங்கினர். இதில் பண்ட் 5 ரன்களில் பெவிலியன் திரும்ப, பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார்.
ஆனால், இவர்களுக்கு பின்னர் பிரிதிவ் ஷாவுடன் ஜோடி சேர்ந்தார் ஹனுமா விஹாரி. இருவரும் அபராம விளையாடி மேற்கிந்திய அணியின் பந்துகளை சிதறவிட்டனர். இதில் பிரிதிவ் ஷா 90 பந்துகளில் 102 ரன்களும்,ஹனுமா விஹாரி 131 பந்துகளில் 147 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி 354 ரன்களை குவிக்க இருவரும் உறுதுணையாக இருந்தனர். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய அணி 37.4 ஓவர்களுக்குள் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது.