மன்னிச்சுடு தம்பி.. முஷீர் கானிடம் சாரி கேட்ட பிரிதிவி ஷா.. விரைவில் வெங்சர்கார் விசாரணை

Prithvi Shaw
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பை 2025 – 26 சீசன் விரைவில் துவங்க உள்ளது. அத்தொடருக்கு முன்பாக அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. அதில் மகாராஷ்டிரா மற்றும் மும்பை அணிகள் மோதிய பயிற்சி போட்டி சில நாட்களுக்கு முன் புனே மைதானத்தில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் மகாராஷ்டிராவுக்காக விளையாடிய பிரிதிவி ஷா அபாரமாக விளையாடி 181 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் அவுட்டாகி செல்லும் போது மும்பை வீரர் முசீர் கானுடன் அவர் சண்டையிட்டது உண்டாக்கியது. அதாவது முசீர் கான் வீசிய பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்த பிரிதிவி ஷா கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

மன்னிப்பு கேட்ட பிரிதிவி:

அப்போது விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் முஷீர் கான் அவருடைய முகத்துக்கு முன் கொண்டாடியுள்ளார். அதனால் கோபமடைந்த பிரிதிவி ஷா அவரை அடிப்பதற்காக பேட்டை சுழற்றினார். நல்லவேளையாக முசீர் கான் கொஞ்சம் இடைவெளியில் இருந்ததால் பேட் அவர் மேலே படவில்லை. அதோடு நிற்காத பிரிதிவி அவருடைய சட்டையைப் பிடித்து சண்டைக்கு சென்ற போது நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தினர்.

இறுதியில் என்னை போன்ற பகுதி நேர பவுலரிடம் விக்கெட்டை கொடுத்ததற்காக “மிக்க நன்றி” என்ற வார்த்தைகளை முசீர் கான் கலாய்க்கும் வகையில் பிரிதிவியிடம் சொன்னது தெரிய வந்தது. மறுபுறம் ஜூனியர் வீரர் நம்மை அவுட்டாக்கி கிண்டல் செய்கிறாரே என்ற வகையில் பிரிதிவி ஷா கோபப்பட்டு சண்டைக்கு சென்றதாக செய்திகள் தெரிவித்தன. இத்தனைக்கும் கடந்த வருடம் வரை மும்பை அணிக்காக முஷீர் கான் – பிரிதிவி ஷா ஆகியோர் ஒன்றாக விளையாடினர்.

- Advertisement -

விசாரிக்கும் வெங்சர்கார்:

அப்படி இருந்தும் அவர்கள் இப்படி சண்டை போட்டது பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் முசீர் கானிடம் சண்டை போட்டதற்காக பிரித்வி ஷா மன்னிப்பு கேட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக “நான் உன்னுடைய பெரிய அண்ணனை போன்றவன்” என்று அவர் முஷீர் கானிடம் தம்பியாக பாவித்து மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அபிஷேக் நாயர் சொன்னது போலவே டெல்லி மண்ணில் அசத்தி காட்டிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

மொத்தத்தில் இந்த விவகாரத்தில் அதிருப்தியடைந்த மும்பை வாரியம் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்காரை விசாரணைக்காக நியமித்துள்ளது. விரைவில் முஷீர் – பிரிதிவி ஆகியோரை விசாரித்து சண்டைக்கான காரணம் பற்றிய அறிக்கையை அவர் மும்பை வாரியத்திடம் சமர்ப்பிக்க உள்ளார். இந்த விவகாரம் பிரிதிவி ஷா கேரியருக்கு மற்றுமொரு கருப்பு புள்ளியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement