அஷ்வின் இருந்த நிலைமைக்கு எப்படி 5 ஆவது நாளில் பேட்டிங் செய்ஞ்சாருன்னு தெரியல – அஷ்வின் மனைவி ட்வீட்

Prithi-Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைப்பெற்ற மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் 338 ரன்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிஸ்சில் 312ரன்கள் குவிக்க அதன்பிறகு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து டிரா செய்தது.

Ashwin

- Advertisement -

இறுதி நாள் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் 97 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரிஷப் பண்ட்டுடன் இணைந்து புஜாராவும் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இதையடுத்து இணைந்த அஸ்வின், விகாரி ஜோடி தேனீர் இடைவெளிக்கு பின் வெற்றி அடைய முடியாது என்றதால் விக்கெட்களை இழக்காமல் போட்டியை ட்ரா செய்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருக்கின்றனர். இந்த போட்டியில் அஸ்வின் 128 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை அடித்தார். இந்த போட்டியின் போது சில பவுன்சர் பந்துகளில் அவர் அடிவாங்கியும் அதனை தாங்கி கொண்டு ச்செஸ்ட் கார்டு வைத்துக்கொண்டு இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை டிராவிற்கு அழைத்து சென்றார்.

ashwin 1

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிர்டியான ஆட்டத்தை கண்டு கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட அனைவரும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரவிசந்திரன் அஸ்வினின் மனைவி ப்ரீத்தி அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் “4-வது நாள் ஆட்ட முடிவில் அஸ்வின் முதுகு வலியால் அவதிப்பட்டார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அப்போது அவர் ஷூ லேஸ் கூட கட்டமுடியாத நிலையில் இருந்தார்”.

ஆனால் இறுதி நாள் போட்டியில் இவ்வளவு சிறப்பாக விளையாடியது ஆச்சரியமாக இருக்கிறது” என்று ட்வீட் செய்தார். மீண்டும் ரீட்வீட் செய்த ப்ரீத்தி “தற்போது எனக்கு பேக் செய்வதற்கு யார் உதவ போகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். அஸ்வின் மனைவியின் இந்த ட்விட் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement