
சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே தரம்சாலா நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.
அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை ஜூன் 17-ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முறைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் அணியும் களம் காண்கிறது.
அதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஒரு புதுமுக வீரருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி சார்பாக இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே ஆகியோருக்கு முதலாவது ஒருநாள் போட்டியின் போது வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வேளையில் நாளைய இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இல்லை – மாற்றுவீரர் இவர்தான்
அப்படி பிரசித் கிருஷ்ணாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வேகப்பந்து வீச்சாளராக இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு 2026 ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசிய அவர் 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வாய்ப்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.