ஐ.பி.எல் தொடரில் மிகவும் ஈர்க்கப்பட்ட 5 இளம் வேகபந்து வீச்சாளர்கள்..! – இதில் சென்னை வீரர் யார் தெரியுமா ?

mavi
- Advertisement -

கிரிக்கெட் உலகில் ஐபில் டி20 போட்டிகள் தான் மற்ற டி20 போட்டிகளை விட மிகவும் பிரபலமான ஒரு தொடர். ஏனெனில் இதில் தான் பல்வேறு நாட்டின் வீரர்களும் வந்து கலந்து கொன்டுள்ளனர். மேலும் இந்த தொடரின் மூலம் வளர்ந்து வரும் இந்திய வீரர்களை அடையாளம் காண இந்த ஐபில் தொடர் மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

deepak

- Advertisement -

மேலும் தற்போது நடந்து வரும் ஐபில் சீசன் 11 இல் பல்வேறு இளமை வீரர்கள் தனது திறமைகளை காட்டி வருகின்றனர். மேலும் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்கு சிறந்த பேட்ஸ்மேன்களும், சிறந்த பந்து வீச்சாளர்களும் கிடைப்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் இந்த ஆடு நடந்துவரும் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் டாப் 5 இளம் வீரர்களைபற்றி இங்கேய காணலாம்.

சென்னை அணியின் தீபக் சஹர்:

வேகப்பந்து வீச்சாளரான இவர் .இந்த தொடரில் 80 லட்சம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட இவர், இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.மேலும் தோனியின் சிறந்த நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

கொல்கத்தா அணியின் சிவம் மாவி:

மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவர் கொல்கத்தா அணியால் 3.2 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் ஒத்த ipl தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்தாலும் , இவரும் இந்த இத்தொடரில் கவனிக்கபட வேண்டிய ஒரு வீரர் தான்.

- Advertisement -

mavi1

பெங்களூர் அணியின் மொஹமது சிராஜ்:

இந்த ஐபில் தொடரில் கவனிக்கபட வேண்டிய ஒரு முக்கியமான ஒரு நபர். ஆட்டோ ரிட்சா ஓட்டும் ஒருவரின் மகன் இந்த இடத்திற்கு வருது என்பதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இந்த தொடரில் இவர் 5 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் ரன்களை வீட்டுக் கொடுத்தாலும் இவரது ஏர்க்கர் பந்துகள் எதிரணி வீர்ரகளை நிலைகுலைய செய்கிறது.

- Advertisement -

siraj

ஹைதராபாத் அணியின் பசில் தம்பி:

ஹைதராபாத் அணியில் ஆடிவரும் இவர் சென்ற ஆண்டு குஜராத் அணியில் சிறப்பாக ஆடிவந்தார்.மேலும் அந்த ஆண்டு இவர் ஆடிய 12 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த தொடரில் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இந்த வேக பந்து வீச்சாளர்.

basil

பஞ்சாப் அணியின் அன்கிட் ராஜ்புட்:

இந்த 5 வீரர்களிலேயே சிறந்த பந்துவீச்சாளர் என்று இவரை தைரியமாக கூறலாம்.இந்த ஆண்டு பஞ்சாப் அணியால் 3 கோடி ரூபாய்க்கு ஏலமெடுக்கப்பட்ட இவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் . மேலும் ஐபில் தொடரில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement