வாழ்ந்தது போதும். தற்கொலைக்கு முயன்ற பிரவீன் குமார். திடுக்கிடும் காரணம் – ஷாக்கிங் பேட்டி

Praveen-Kumar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமாரை அவ்வளவு எளிதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அவரது அற்புதமான ஸ்விங் பந்துவீச்சை நாம் பலமுறை கண்டிருப்போம். அதிலும் குறிப்பாக 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சிபி சீரியஸில் ஆஸ்திரேலியாவில் அவர் பந்து வீசிய விதம் நாம் அனைவரும் அறிந்ததே. அவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக தலைசிறந்த வீரராக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் காயம் மற்றும் ஒழுக்கமின்மை ஆகியவற்றால் பிரவீன் குமார் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

- Advertisement -

2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமான பிரவின்குமார் இதுவரை இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளையும், 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக விளையாடி பிரவீன்குமார் அதன்பிறகு அணியில் இடம்பிடிக்கவில்லை என்பதால் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர் தற்கொலைக்கு முயன்ற விடயம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பொழுது எனக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அணியில் இடம் கிடைக்காத மன அழுத்தத்தினால் குடிக்க துவங்கினேன். யார் தற்போது குடிக்காமல் இருக்கிறார்கள் அனைவரும் தான் குடிக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு விடயம் தான் என்னைப் பற்றி அதிகம் வெளி வந்தது.

praveen kumar 1

ஆனால் நான் செய்த நல்ல விடயம் எதுவும் வெளிவரவில்லை. நான் பல குழந்தைகளுக்கு கல்விச் செலவிற்கு உதவுகிறேன். நிறைய பேருக்கு திருமண உதவி மற்றும் கிரிக்கெட்டர்களுக்கு பண உதவி போன்ற பல விடயங்களை நான் செய்து வருகிறேன். ஆனால் என்னுடைய குடிப்பழக்கத்தைப் பற்றித்தான் நிறைய பேசினார்கள். ஆனால் என்னுடைய அந்த பழக்கம் என்னுடைய மன அழுத்தத்தினால் வந்தது. மேலும் ஒரு கட்டத்தில் நான் இந்திய அணியில் இல்லை என்ற மன அழுத்தத்தில் எனது ரிவால்வரை எடுத்து நானே என்னை சுட்டுக் கொள்ள முயன்றேன்.

Praveen-kumar

அந்த அளவிற்கு நான் மனதளவில் பாதிக்கப்பட்ட இருந்தேன் என்றும் என் வாழ்க்கையை அப்போதே முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் நினைத்ததாக புவனேஸ்வர் குமார் வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணமாக அவரது காயம் மற்றும் அவரது ஒழுங்கீனம் ஆகியவை பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டு வந்த பிரவீன்குமார் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா போன்ற பல தரமான பந்து வீச்சாளர்களின் வருகையால் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் போய் விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement