எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத என்மீது இவ்வளவு பெரிய பழியா – பிரவீன்குமார் வருத்தம்

Praveen

இந்திய அணியில் முன்னாள் வீரரான 33 வயதான வேகப்பந்துவீச்சாளர் பிரவீன்குமார் இந்திய அணிக்காக கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி கிட்டத்தட்ட 68 ஒருநாள் போட்டிகள், 6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரவீன்குமார் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

praveen kumar 1

இந்நிலையில் தற்போது அவர் குடிபோதையில் தீபக் சர்மா என்பவரையும் அவரது மகனையும் தாக்கிய வழக்கில் போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அதன்படி உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த தீபக் சர்மா என்பவர் தனது மகனுடன் பேருந்துக்காக காத்திருந்த பொழுது அங்கு காரில் வந்த பிரவீன் குமார் குடித்து விட்டு முழுவதுமாக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தீபக் சர்மாவுடன் போதையில் தகராறு செய்த பிரவீன்குமார் தீபக் சர்மாவை தாக்கியதுடன் அவரது 7 வயது மகனை கீழே தள்ளிவிட்டு காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு புகார் கொடுத்த தீபக் சர்மா அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

Praveen-kumar

அதனை அடுத்து அந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசிய புவனேஸ்வர் குமார் தான் ஈ எறும்புக்கு கூட துரோகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதில்லை அவ்வாறு நான் இருக்கும் போது என் மீது ஏன் இப்படி பழி சுமத்துகிறார்கள் என்று புரியவில்லை. நான் தீபக் சர்மா கூறியதைப் போன்று எந்த ஒரு தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று பிரவீன் குமார் கூறியுள்ளார்.

- Advertisement -

பிரவீன்குமார் இதுபோன்று போதையில் பொதுமக்களை தாக்குவது இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு மது போதையில் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக பிரவீன் குமார் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.