IPL 2023 : தற்போதைய டெல்லி அணியின் பெஸ்ட் பினிஷர்னா அது இவர்தான் – பிரவீன் ஆம்ரே பேட்டி

Praveen-Amre
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது மே மாதம் முதல் வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை 43 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இன்று அகமதாபாத் நகரில் 44-வது லீக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

DC

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 130 ரன்களை குவித்தது.

பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரே அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Axar Patel 1

அந்த வகையில் பிரவீன் ஆம்ரே கூறியதாவது : இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகள் மிகச் சிறப்பாக விளையாடுகின்றன. எப்போதுமே ஐபிஎல் போட்டிகளில் மேஜிக் நடக்கும். அந்த வகையில் இந்த தொடரிலும் எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்க கூடிய அளவு வலிமையாக உள்ளது.

- Advertisement -

தற்போதைக்கு எங்களுடைய திட்டம் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. நடந்து முடிந்ததை நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல் நடக்கப்போவதை நினைக்கப் போகிறோம். நிச்சயம் இனி வரும் போட்டிகளில் டெல்லி அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

இதையும் படிங்க : வீடியோ : பவர் பிளே ஓவரிலேயே டெல்லியின் கதையை முடித்த ஷமி – 12 வருடங்கள் கழித்து துல்லியமான சாதனை

எங்கள் அணியை பொறுத்த வரை துணை கேப்டன் அக்சர் பட்டேல் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரிடம் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் பினிஷிங் திறமை உள்ளது. தற்போதைக்கு எங்கள் அணியின் மிகச்சிறந்த ஃபினிஷர் அக்சர் பட்டேல் தான் என பிரவீன் ஆம்ரே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement