- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிச்சயமாக ஆஸ்திரேலிய அணியை எங்களால் வீழ்த்த முடியும்.. எங்களுக்கு இந்த பிளஸ் இருக்கு – பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

எங்களால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் :

அதனை தொடர்ந்து இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் ஐந்தாவது மிக முக்கிய டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்கும் என்கிற நிலையுடன் விளையாடி வருகிறது.

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்கள் குவித்து ஆல்அவுட்டானது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 181 ரன்களுக்கு சுருண்டது.

இதன் காரணமாக நான்கு ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியை ஆல் அவுட் செய்து எங்களால் வெற்றி பெற முடியும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியில் எவ்வளவு ரன்கள் அடித்தால் வெற்றி பெற போதுமானதாக இருக்கும் என்பது குறித்து நான் பெரிதாக யோசிக்கவில்லை. ஆனால் நிச்சயம் இங்கிருந்து எவ்வளவு ரன்கள் அடித்தாலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு நிறைய சாதகம் இருக்கிறது.

இதையும் படிங்க : அதை செய்யாம கலக்கிட்டாரு.. ரிஷப் பண்ட் இல்லனா இந்தியா 100 தாண்டிருக்காது.. திட்டிய கவாஸ்கர் பாராட்டு

ஒரு சில இடங்களில் பந்து உயரம் குறைவாகவும், சில இடங்களில் நல்ல பவுன்சரும் கிடைக்கிறது. இதன் காரணமாக எந்த இடத்தில் பந்து வீசினால் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை அளிக்க முடியும் என்பதை கணித்து அந்த இடத்தில் தொடர்ச்சியாக பந்துவீசி எங்களது திட்டங்களை அவர்களுக்கு எதிராக செயல்படுத்துவோம் நிச்சயம் இதன் மூலம் வெற்றி கிடைக்கும் என பிரசித் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -