இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31 முதல் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் அடித்து 23 ரன்கள் முன்னிலையாகப் பெற்றது. அதிகபட்சமாக பென் டக்கெட் 43, ஜாக் கிராவ்லி 64, ஹாரி ப்ரூக் 53 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 75/2 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
நண்பருடன் சண்டை:
முன்னதாக அந்தப் போட்டியில் 2வது நாளில் 22வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை வீசிய அவர் அதை எதிர்கொண்ட ஜோ ரூட்டிடம் ஏதோ சில வார்த்தைகளை சொல்லி ஸ்லெட்ஜிங் செய்தார். அதனால் கடுப்பான ஜோ ரூட் அடுத்த பந்திலேயே பௌண்டரி அடித்து “என்கிட்ட மோதாதே” என்ற வகையில் பிரசித் கிருஷ்ணாவிடம் கோபமாக பேசினார்.
பொதுவாகவே அமைதியாக இருக்கக்கூடிய ரூட் அந்த தருணத்தில் கிருஷ்ணாவிடம் அப்படி பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் அந்த சமயத்தில் போட்டித் தன்மையை ஏற்படுத்தி விக்கெட்டை எடுப்பதற்காக திட்டமிட்டு ரூட்டை கொஞ்சம் ஸ்லெட்ஜிங் செய்ததாக பிரசித் கிருஷ்ணா ஒப்புக் கொண்டுள்ளார். அதே சமயம் களத்திற்கு வெளியே தம்முடைய நண்பரான ஜோ ரூட் அதற்காக அப்படி ரியாக்சன் கொடுப்பார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கிருஷ்ணா விளக்கம்:
இது பற்றி கிருஷ்ணா பேசியது பின்வருமாறு. “அந்த வெளிப்பாடு எங்களுக்குள் இருக்கும் ஒரு போட்டியின் விளிம்பு என்று நினைக்கிறேன். உண்மையில் களத்திற்கு வெளியே நாங்கள் நல்ல தோழர்கள். அது ஒரு சிறிய போட்டி மட்டுமே. அதை நாங்கள் இருவருமே மகிழ்ச்சியாக எதிர்கொண்டோம். அதுவே நானாகும். அப்படி செய்வதால் நான் நன்றாக ஓடிகிறேன்”
இதையும் படிங்க: ஒழுங்கா இருங்க.. நானா இருந்தா ஆகாஷ் தீப்புக்கு முழங்கை வைத்தியம் செஞ்சு விட்ருப்பேன்.. ட்ரெஸ்கோத்திக் எச்சரிக்கை
“அப்படி பவுலிங் செய்வதை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறேன். அங்கே ஒரு சில விக்கெட் விழுந்திருந்தால் விஷயங்கள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். எங்களுடைய திட்டத்தின் ஒரு அங்கமாகும். ரூட் அப்படி ரியாக்சன் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விளையாட்டின் லெஜெண்டான அவரை நானும் விரும்புகிறேன். அது கொடுப்பட்ட தருணத்தில் 2 நபர்கள் தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுத்து வின்னராக வருவதற்கு முயற்சிக்கக்கூடிய விஷயம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.



