இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 சதங்கள் அடித்தும் பரிதாபமாக தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்ய தவறியதும், 7 கேட்ச்கள் தவற விட்டதும் முக்கிய காரணமானது.
அதே போல ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக பவுலிங் செய்ததும் இங்கிலாந்தின் வெற்றியை எளிதாக்கியது. குறிப்பாக நல்ல உயரத்தைக் கொண்ட இளம் வேகப் பந்துச்சாளர் பிரசித் கிருஷ்ணா முதல் இன்னிங்ஸில் ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில் முதல் போட்டியில் தாம் விரும்பிய லென்த்தில் நம்மால் பந்து வீச முடியாமல் போனதை கண்டறிந்துள்ளதாக பிரசித் கிருஷ்ணா கூறியுள்ளார்.
தடுமாறக் காரணம்:
குறிப்பாக 6 – 8 மீட்டர் ஷார்ட் லென்த்தில் பந்துகளை போடாமல் விட்டது தம்முடைய தடுமாற்றத்திற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்றுள்ளதால் இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பேன் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி பிரசித் கிருஷ்ணா பேசியது பின்வருமாறு.
“முதல் இன்னிங்ஸில் நான் பவுலிங் செய்ய விரும்பியதை விட கொஞ்சம் ஷார்ட்டாக போட்டேன். 6 – 8 என்பது சரியானதாக இருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் அது கொஞ்சம் நன்றாக இருந்தது. ஏனெனில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக மாறியது. நான் விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்கும் போது 8 மீட்டருக்கு கொஞ்சம் கீழே ஃபுல்லாக வீச வேண்டும்”
அனுபவ பாடம்:
“அந்த வகையில் முதல் போட்டியில் நான் விரும்பிய லெந்தில் பந்து வீசவில்லை என்பதை கண்டறிந்துள்ளேன். பிட்ச்சில் இருந்த சரிவுப் பகுதியைப் பயன்படுத்துவதற்கு எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆனால் இதெல்லாம் சொல்வதற்கு காரணம் இல்லை. தொழில்முறையில் நான் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்”
இதையும் படிங்க: அடுத்த 2 ஆவது போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதில் அந்த 2 பேரில் ஒருவருக்கு சேன்ஸ் தரலாம் – அதுதான் கரெக்ட்
“அடுத்த முறை இதிலிருந்து முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்துவேன். ஒவ்வொரு முறையும் பவுலிங் வீசச் செல்லும் போது அதை மெய்டனாக போட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே சொல்வேன். பவுண்டரியை கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்க மாட்டேன். வெளிப்புற ஆடுகளம் வேகமாக இருந்தது. என்னுடைய லைன், லென்த் ஆகியவை சிறப்பாக இல்லை என்பதே உண்மையாகும். அதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் என்னை அடித்தார்கள். அதில் சில எட்ஜ்கள் வந்தன. பவுன்சர் வீச முயற்சித்த போது ரன்களை கொடுத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ரன்களை குறைவாக கொடுத்து அழுத்தத்தை உருவாக்குவதே என்னுடைய இலக்கு” என்று கூறினார்.



