புதுமுக வீரருக்கு அறிமுக வாய்ப்பு கொடுப்பதற்காக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நட்டு – கடைசிநேர ட்விஸ்ட்

Nattu

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் முடிவைடைந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று புனே மைதானத்தில் துவங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சற்று முன்னர் தொடங்கிய நிலையில் டாஸ் போடப்பட்ட பிறகு டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.

INDvsENG

அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது உள்ளதால் பெரும் நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த போட்டியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இரு புதுமுக வீரர்கள் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளனர்.

அதன்படி க்ருனால் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியுள்ளனர். இதில் க்ருனால் பாண்டியா ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்காக சுழல்பந்து ஆல்-ரவுண்டராக அணியில் இடம் பிடித்துள்ளார். அதே வகையில் இந்திய அணியில் இணைந்துள்ள பிரசித் கிருஷ்ணா தற்போது நடராஜனின் இடத்தை பிடித்து அணியில் அறிமுகமாகியுள்ளார்.

krishna 1

ஏனெனில் இந்த தொடர் துவங்கும் முன்னர் திருமண விடுப்பு காரணமாக ஓய்வு எடுத்துக் கொண்ட பும்ராவின் விலகல் காரணமாக நடராஜன் இந்த தொடரில் பும்ராவின் இடத்தில் விளையாடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது நடராஜனின் அந்த இடத்தில் அறிமுக வீரரான பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

krishna

ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் முடிவிலும் விராட் கோலி பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் விரைவில் அறிமுகமாவார், அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இந்த ஒருநாள் போட்டியில் பிரசித்த கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்காரணமாக ஒருநாள் போட்டியில் முழுமையாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.