இவருக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நடராஜனையே விளையாட வச்சிருக்கலாம் – ரன்களை வாரி வழங்கிய அறிமுகவீரர்

Prasidh

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 98 ரன்களையும், விராட்கோலி 56 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Dhawan

இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 62 ரன்களையும், க்ருனால் பாண்டியா 58 ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக க்ருனால் பாண்டிய மற்றும் கிருஷ்ணா ஆகியோர் வாய்ப்பினை பெற்றனர். இதில் க்ருனால் பாண்டியா பேட்டிங்கில் அசத்திவிட்டார்.

ஆனால் பும்ராவின் இடத்தில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.இந்த ஒருநாள் தொடரில் பும்ராவின் இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்காமல் இவருக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

krishna

ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த தவறிய அவர் முதல் 3 ஓவர்களிலேயே ரன்களை வாரி வழங்கியுள்ளார். 3 ஓவர்கள் முதல் ஸ்பெல் வீசிய இவர் 3 ஓவர்களில் 37 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் ரன்களை வாரி வழங்கி வருவது வருத்தத்தை அளித்துள்ளது.

- Advertisement -

nattu 1

இவரின் இந்த மோசாமான பவுலிங்கை கண்ட ரசிகர்கள் இவருக்கு பதிலாக தமிழக வீரரான நடராஜனுக்கே வாய்ப்பளித்து இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.