
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மினி ஏலத்தின் போது வழக்கத்திற்கு மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு பல்வேறு இளம் வீரர்களை விலைக்கு வாங்கியிருந்தது. அந்த வகையில் உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில் அசத்திய 20 வயது வீரரான பிரசாந்த் வீரை 14. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
இப்படி ஒரு இளம் ஆல்ரவுண்டருக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாட இருக்கும் பிரசாந்த் வீர் தனது இந்த அனுபவம் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் ரவீந்திர ஜடேஜாவுடன் தான் ஒப்பிடப்படுவது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நான் பிடிக்க வேண்டும் என நினைத்தால் அது எனக்கு அதிகப்படியான அழுத்தத்தை தான் கொடுக்கும். அப்படி ஒருபோதும் நான் ஜடேஜாவின் இடத்தை பிடிக்க நினைக்க மாட்டேன்.
ஏனெனில் அவர் சிஎஸ்கே அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் ஜடேஜா செய்ததை ஈடு செய்வது என்பது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது. நான் என்னிடம் என்ன இருக்கிறதோ, என்னை இந்த இடத்திற்கு எது அழைத்து வந்ததோ அதை சரியாக செய்ய முயற்சிக்கிறேன். என்னால் எந்த சூழ்நிலையிலும் இறங்கி சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும்.
இதையும் படிங்க : இந்திய டி20 அணி இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்க காரணமே இதுதான்.. சூரியகுமார் யாதவ் – பகிர்ந்த தகவல்
ஓப்பனிங் தவிர வேறு எந்த இடத்தில் இறங்கினாலும் என்னால் மிகச் சிறப்பாக விளையாட முடியும். ஐபிஎல் போன்ற பயிற்சி அமர்வுகளில் இதுவரை நான் ஈடுபட்டது கிடையாது. இங்குள்ள சூழல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. நான் இங்கே இருப்பது எனக்கும், என் குடும்பத்திற்கும், என் கிராமத்திற்கும் கிடைத்த பாக்கியம் என பிரசாந்த் வீர் கூறியது குறிப்பிடத்தக்கது.