ஒருநாள் போட்டிகளில் ஆட இவர் தயாராகிவிட்டார். இனிமே நம்பர் 4 இவர்தான் – தேர்வுக்குழு தலைவர் தகவல்

Prasad

இந்திய அணி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணியின் நான்காவது வீரர் குறித்தும், தோனி ஓய்வு குறித்தும் அதிக அளவில் பேசப்பட்டது. அதன் பின்னர் எப்படியோ மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் தற்போது முடிவடைந்துள்ளது.

Iyer-2

இந்த தொடரில் கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணி குறித்து தேர்வுக் குழு தலைவர் பிரசாத் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : 3 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது சிறப்பானது.

இந்த தொடரில் இளம் வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடினார். இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அவர் அசத்தி ஒருநாள் போட்டிகளுக்கு விளையாட தான் தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு இனி தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படும். மேலும் நம்பர் 4ஆவது வீரராகவும் அவர் விளையாட வாய்ப்பிருக்கிறது.

டி20 போட்டிகளில் க்ருனால் பாண்டியா, சைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதாகும், விஹாரி டெஸ்ட் போட்டிகளில் நிலையான இடத்தைப் பிடிப்பார் என்று பிரசாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.