முச்சதம் அடித்த இளம்வீரரின் வாழ்க்கையை முடித்துவிட்டு முதலைக்கண்ணீர் விடும் எம்.எஸ்.கே பிரசாத் – விவரம் இதோ

Prasad
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற கருண் நாயரை அணியிலிருந்து ஒதுக்கியதற்கு ஏற்கனவே மழுப்பலான பதில்களை தெரிவித்து இருந்தார். அவரின் இந்த பதில்களுக்கு ஏற்கனவே சுனில் கவாஸ்கர் மட்டுமின்றி இந்திய அணியின் பல முன்னாள் வீரர்களும் கடுமையாக சாடினார்.

Prasad

- Advertisement -

எப்போதெல்லாம் கருண் நாயர் குறித்து கேள்வி எழுகிறதோ அப்போதெல்லாம் எதையோ சொல்லி சமாளித்து மீண்டும் பழையபடி தேர்வினை செய்துவந்தார். இந்நிலையில் தற்போது பிரசாத் கருண் நாயர் குறித்து கூறுகையில் : முச்சதம் அடித்த பிறகு கூட இந்திய அணியில் அவரை மீண்டும் எடுக்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது. அதற்கடுத்த தொடரில் இந்திய அணியில் அவர் இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் முச்சதம் எடுத்துவிட்டு தனது மறு வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரரின் கஷ்டம் என்பது மிகவும் கடினமானது. இதில் உண்மையைச் சொல்லப்போனால் இந்த விடயம் சற்று எனக்கு இதயத்தை நொறுங்க செய்கிறது. அவருக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்கும் இந்த விடயம் வருத்தமான ஒன்றுதான் என்று பிரசாத் கூறினார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சென்னையில் சேவாக் 319 ரன்கள் விளாசிய பிறகு வலுவான இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் 303 ரன்களை எடுத்தார். இந்தியா இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். பெரிய நட்சத்திர வீரர் பிறந்து விட்டார் என்று உலகமே வியந்த தருணத்தில் அதன்பிறகு மூன்று போட்டிகளில் மட்டுமே கருண் நாயர் விளையாடினார்.

- Advertisement -

அவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று தெளிவாக பிரசாத் அம்பலப்படுத்தி இருக்க வேண்டும் அதை விடுத்து தற்போது கருண் நாயரின் கிரிக்கெட் கரியரை முடித்து வைத்து விட்டு முதலைக் கண்ணீர் வடிப்பது தேவையற்ற செயலாக தெரிகிறது. அதேபோல் உலக கோப்பை தொடரிலும் அம்பத்தி ராயுடு மூன்றாவது வீரராக தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விஜய் சங்கரை தேர்வு செய்து உலகக் கோப்பையில் விளையாட வைத்துவிட்டு பிறகு அதன்பிறகு ராயுடுவை தேர்வு செய்யாததற்கு நீலிக் கண்ணீர் வடித்தார் பிரசாத் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படி இவர்கள் இருவரது தேர்விலும் விளையாடியவர் பிரசாத். மேலும் ரவி சாஸ்திரி மற்றும் கோலியின் பங்கு இந்த வீரர்களின் தேர்வு இருக்கிறதா என்பதை பிரசாத் ஒருபோதும் கூறவில்லை மேலும் கோலி மற்றும் ரவி சாஸ்திரிக்கு அடிபணிந்து பிரசாத் செயல்பட்டு வந்தார் என்ற கருத்தும் அப்போது நினைவு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement