பண்ட்க்கு பதிலாக 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை உருவாக்கி வருகிறோம் – தேர்வுக்குழு தலைவர் பேட்டி

Prasad
- Advertisement -

தோனிக்கு மாற்றாக தற்போது இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் ரிஷப் பண்ட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். உலக கோப்பை தொடரில் இருந்து பண்ட் செயல்பாடு மோசமாகவும், பேட்டிங் படு மந்தமாக உள்ளது.

Pant

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சொதப்பிய பண்ட் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சோபிக்க தவறி வருகிறார். இதனால் பண்ட்டை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் பண்ட் குறித்து பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :

டோனிக்கு பதிலாக பண்ட் இந்திய அணியில் தேர்வானது அவருடைய திறமை அசாத்தியமானது என்ற காரணத்தினால் தான் இருப்பினும் உலக கோப்பை தொடருக்கு பின்னர் அவரது விளையாட்டை நன்கு கவனித்து வருகிறோம். இப்போதும் அடுத்து அவரே விக்கெட் கீப்பராக எங்களது முதல்தேர்வாக இருப்பார். இருப்பினும் அவரது ஆட்டம் மட்டு பட்டால் அவரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இருப்பினும் இதனை சரி செய்து அவர் தனது திறமையை நிரூபித்தார் என்று நம்புகிறோம்.

samson 2

மேலும் விக்கெட் கீப்பராக நமது அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக இந்திய ஏ அணியில் ]செயல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் மற்றும் கே எஸ் பரத் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்களுடைய ஆட்டத்தை நாங்கள் கவனித்து வருகிறோம் மேலும் அவருடைய ஆட்டத்தை நாங்கள் மேம்படுத்தியும் வருகிறோம். ஏனெனில் அவர்கள் இந்திய அணிக்காக எதிர்காலத்தில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள் எனவே அவர்களை நாங்கள் இப்போதே தயார் செய்து வருகிறோம் என்றும் பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement