இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று சிரமமாக உள்ளது. மேலும் அவரது ஓய்வு குறித்த பேச்சும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
"No update on MS Dhoni's retirement, the news is incorrect."
– MSK Prasad, Chief Selector#MSDhoni #Dhoni #TeamIndia pic.twitter.com/2uxA7jSxCS
— MS Dhoni Fans Official (@msdfansofficial) September 12, 2019
இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது : தோனி ஓய்வு அறிவிப்பு குறித்து இதுவரை எந்த புதிய அறிவிப்பும் எங்களிடம் வரவில்லை சமூகத்தில் பரப்பப்படும் அனைத்து தோனி குறித்த செய்திகளும் தவறானவை. அவரது ஓய்வு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் எங்களிடம் கிடைக்கப்பவில்லை.
எனவே இந்த பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் , பொய்யான இந்த தகவலை நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் பிரசாத் தெரிவித்துள்ளார். தோனி ஓய்வு குறித்து எந்த முடிவையும் அவர் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது இந்த பதிவின் தெளிவாக எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.