18 மாத காத்திருப்பு ஓவர். இனி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவர்தான் நம்பர் 4 – தேர்வுக்குழு தலைவர் அதிரடி

Prasad

இந்திய அணி தற்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் மற்றும் ஒருநாள் டி20 தரவரிசை என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நல்ல நிலையில் இருந்தாலும் இந்திய அணிக்கு ஒரு பாதகமான விடயமாக பார்க்கப்படுவது இந்திய அணியில் 4 ஆவது இடத்தில் இறங்கும் வீரர் குறித்துதான் ஏனெனில் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி 4 ஆவது வீரர் குறித்து எழுந்த சர்ச்சைகள் நாம் அறிந்ததே.

Ind-1

இந்தியா அணி நான்காவது இடத்துக்காக தினேஷ் கார்த்திக், பண்ட், அம்பத்தி ராயுடு, தோனி, விஜய் சங்கர் மற்றும் ராகுல் என மாற்றி மாற்றி இறக்கியது. ஆனால் தொடர்ந்து யாருக்கும் நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை இறுதியில் உலகக்கோப்பை தொடரில் ராகுல் 4 ஆவது வீரராக விளையாடினார். உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் மீண்டும் ராகுலின் இடம் பறிபோனது.
இதனால் இந்திய அணியின் 4 ஆவது வீரர் குறித்த இடம் சர்ச்சையானது.

இந்நிலையில் தற்போது அந்த இடத்திற்கான சரியான ஆள் கிடைத்துள்ளதாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். அதன்படி எம்எஸ்கே பிரசாத் தெரிவித்ததாவது : கோலிக்கு ஒருநாள் தொடரில் சற்று ஓய்வு தேவை என்பதற்காக அவருக்கு பதிலாக 2017ஆம் ஆண்டு இலங்கை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரை களம் இறக்கினோம் அந்த தொடரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 18 மாதங்களாக ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Iyer

மேலும் இந்திய அணியில் நான்காவது வீரரை இனி மாற்றி மாற்றி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஐயர் ஆட்டம் நிலையாக உள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் உள்ளூர் போட்டியில் அவர் தொடர்ந்து ரன்களை கணிசமாக குவித்து வருகிறார். எனவே இந்திய அணி நான்காவது இடத்திற்கு ஒருநாள் மற்றும் டி20 என இரண்டிலுமே பொருத்தமானவர் இவர்தான் என்று முடிவு செய்திருக்கிறோம்.

- Advertisement -

Iyer 1

இனி வரும் போட்டிகளில் அவர் நான்காவது வீரராக நிச்சயம் களமிறங்குவார் என்று பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 9 ஒருநாள் போட்டியில் விளையாடி 346 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அடுத்தமாதம் துவங்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.