டெஸ்டில் ராகுலுக்கு இடம் அவ்ளோதான். அவருக்கு பதிலாக புதிய துவக்கவீரராக இவரை தேர்வு செய்ய உள்ளோம் – எம்.எஸ்.கே பிரசாத்

Rahul

இந்திய அணி சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போதும் அந்த டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக ராகுல் சாதிக்க தவறினார். மேலும் அவர் சென்ற ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். அதன்பிறகு தற்போது 12 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

ragul

மேலும் அவரது ஆட்டம் டெஸ்ட் போட்டிகளில் தற்போது நிலையாக இல்லை மேலும் அவருக்கு பதிலாக துவக்க வீரராக வேறு யாரையாவது களம் இருக்கலாம் என்று முன்னணி வீரர்கள் கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோர் கூறி இருந்த நிலையில் முதன்முறையாக ராகுலின் இடம் குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ராகுல் நிச்சயம் ஒரு சிறப்பான வீரர். அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் இது கடினமான காலமாக அமைந்துள்ளது. அவர் நிச்சயம் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது. அவருக்கு இன்னும் சில வாய்ப்புகளை வழங்க உள்ளோம் அதன் மூலம் அவர் தனது திறமையை நிரூபித்து அணியில் நீடிப்பார் என்று நம்புகிறோம். அவரது பார்ம் மீண்டு வரும் என்பதும் எங்களது நம்பிக்கை.

Rohith-1

அப்படி ஒருவேளை அவருக்கு ஆட்டம் கைகொடுக்கவில்லை என்றால் அணியின் நலன் கருதி அவருக்கு பதிலாக இந்திய அணியின் ஒருநாள் போட்டியின் துணை கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்க பரிசீலிக்கப்படுவார். மேலும் அவரை துவக்க வீரராக களமிறங்கி சோதிக்கவும் தற்போது நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனவே சில போட்டிகளில் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்து அவரது ஆட்டத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு ரோஹித்தை அந்த இடத்தில் களம் இறக்க திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.