நல்லா பண்ணுவாரு நினைச்சோம். ஆனால் நாளுக்கு நாள் மோசமாகவே செயல்படுகிறார் – தேர்வுக்குழு தலைவர் அதிருப்தி

Prasad
- Advertisement -

தோனிக்கு அடுத்து புதிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இந்திய அணி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் அதிக அனுபவம் இல்லாதவர் என்றாலும் ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்த பண்டின் மீது நம்பிக்கை வைத்து அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் அறிமுகம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அவர் விக்கெட் கீப்பிங் படு மோசமாக இருந்து வருகிறது.

Pant

- Advertisement -

பேட்டிங்கில் ஓரளவு சாதித்தாலும் கீப்பிங் இவரின் செயல்பட்டு மிக மோசமாகவே இருக்கிறது. மேலும் பேட்டிங்கில் சொதப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் அது அணியை கடுமையாக பாதிக்க வில்லை. ஆனால் கீப்பிங்கில் அவர் பந்தினை கையில் பிடிப்பதே இல்லை மேலும் பல கேட்சிகளை அவர் தவற விடுகிறார் இது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரிஷப் பண்ட் இதேபோன்று தொடர்ந்து சொதப்பும்போது ரசிகர்கள் தோனி தோனி என்று முழக்கமிட்டு அவரை கிண்டல் அடிக்கின்றனர்.

மேலும் அவர் தனக்கான தனித்துவமான அடையாளத்தை பெற்று தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையை அவர்மீது வைத்து அதற்காகவே அவருக்கு இந்திய நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவர் கீப்பிங்கில் மந்தமாகவே செயல்பட்டு வருகிறார்.

இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டார் என்று பெருமைப்பட்ட நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் கேட்சிகளை கோட்டை விட்டார். ஆனாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதனை அவர் வீணடித்து விட்டார் மேலும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் எடுக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பில் குரல்கள் எழுந்து வருகின்றன.

Pant-4

இருந்தாலும் அவர் மீது இன்னும் நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களுக்கு அவருக்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்தத் தொடர்களில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம். மேலும் ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரிடம் பயிற்சிக்கு அவரை அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம் வருங்காலத்தில் அவர் சிறந்து விளங்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தேர்வு குழு தலைவர் எம் எஸ்கேப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement