தோனியுடன் புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா ? – இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வீரரின் பேட்டி

Parikh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த மகேந்திர சிங் தோணி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவிற்காக டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற அனைத்து ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றி கொடுத்த வீரர், ஒரு ஃபேர்வெல் போட்டியில்கூட விளையாடாமல் தனது ஓய்வு முடிவை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அப்போது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகேந்திர சிங் தோணி இந்தியாவிற்காக கடைசியாக விளையாடி தொடர் என்றால் அது 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உலக கோப்பை தொடர்தான்.

Dhoni

- Advertisement -

அந்த தொடரில் இந்திய பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக மகேந்திர சிங் தோணிக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசியதைப் பற்றி தற்போது ஒரு தனியார் நாளிதழுக்கு பேட்டியாக அளித்துள்ளார், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் வீரரான பிரஹர்ஷ் பரிக். இதுகுறித்து பேசிய அவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரின்போது இந்திய அணிக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசிக் கொண்டிருந்த எனக்கு, அப்போது தோணிக்கு பந்து வீசும் வாய்ப்பும் கிடைத்தது. அதுதான் என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத தருணம். என்னுடைய பந்துகளில் அவர் ஒரு ரன் எடுக்கவே முயற்சி செய்து கொண்டிருந்தார்.

எனவே நான் பந்தை அதிகமாக ஸ்பின் செய்ய நினைத்தேன். அந்த பந்தில் மகேந்திர சிங் தோணி போல்டாகி விட்டார். அவருடைய விக்கெட்டை எடுத்தவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்ல. அதற்காக கொண்டாடுவதா இல்லை அப்படியே இருந்துவிடலாமே என்று கூட என்னால் யோசிக்க முடியவில்லை. வலைப்பயிற்சியில் நிறைய பேட்ஸ்மேன்களை நான் விக்கெட் எடுத்துள்ளேன். ஆனால் தோணியின் விக்கெட்தான் எனக்கு மகத்தானது என்று அவர் கூறியுள்ளார்.

parikh 2

19 வயது மட்டுமே நிரம்பியுள்ள பிரஹர்ஸ் பரிக், இங்கிலாந்து நாட்டில், லாங்ஷையர் அணியின் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி வருகிறார். இவர் ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நெட் பௌலராகவும் இருந்துள்ளார். அது பற்றி நினைவு கூர்ந்து பேசிய அவர்,

Parikh 1

ராஜஸ்தான் அணிக்காக வலைப் பயிற்சியில் இருந்தபோது, ஜாஸ் பட்லருடன் பேச வாய்ப்பு கிடைத்தது எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. மேலும் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின்போது ஹர்திக் பாண்டியாவிடம் உரையாடி இருக்கிறேன். 2014ஆம் ஆண்டு ஓல்ட் ட்ரபோர்டு மைதானத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினையும் நேரில் சந்தித்து இருக்கிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Advertisement