உத்தப்பாவை தொடர்ந்து பி.சி.சி.ஐ யிடம் தனது வேண்டுகோளை வைத்த ஓஜா – விவரம் இதோ

Ojha
- Advertisement -

இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா. இவர் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடினார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடியது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ராஜஸ்தான் ,பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

ojha

- Advertisement -

கடந்த வருடம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் இவர் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய வீரர்கள் வெளிநாட்டு நடைபெறும் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டுமென்று பேசியுள்ளார். மேலும், இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவர் இங்கிலாந்தில் நடக்கும் ‘தி 100’ தொடரில் விளையாட அனுமதி கேட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியாவிற்கு வெளியே நடைபெறும் சில லீக் தொடரில் விளையாட முயற்சி செய்து வருகிறேன். இவை அனைத்தும் எனக்கு சரியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் பிசிசிஐ அனுமதி கொடுத்தால் தான் இது நடக்கும். இந்த விஷயத்தை பிசிசிஐ இடம் கொண்டு செல்வேன் என்று கூறியுள்ளார் பிரக்யான் ஓஜா.

Ojha 1

முன்னதாக ஷேவாக், யுவராஜ்சிங், ஜாகீர்கான் போன்றோர் கனடாவில் நடந்த டி20 லீக் தொடரில் பிசிசிஐயின் அனுமதியுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரும் பிரக்யான் ஓஜா கூறிய இதே கருத்தை பிசிசிஐ-இடம் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Uthappa

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுவரும் உள்ளூர் வீரர்கள் இதுபோன்ற வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் ஆடும்பொழுது அவர்களது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடவைக்கும் என்றும் பலரும் கூறியுள்ளனர். இதனால் பி.சி.சி.ஐ இனிவரும் காலங்களில் இதற்கு அனுமதி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement